Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கணினிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கணினிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

By: vaithegi Fri, 04 Aug 2023 4:36:45 PM

இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கணினிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

இந்தியா: கணினி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு – விலை தாறுமாறாக உயர்வு ... பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் லேப்டாப்கள், கணினி மற்றும் டேப்லெட்களுக்கு சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், வர்த்தகத் துறை விதித்து உள்ளது.

அதாவது, சீனா போன்ற நாடுகளிலிருந்து தான் அதிகளவில் கணினி போன்ற மின்சாதன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் அதனை ஓரளவுக்கு நிறுத்திவிட்டு உள்நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்திய அரசாங்கம் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

controls,import,computer ,கட்டுப்பாடுகள் ,இறக்குமதி ,கணினி

அதாவது, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ள நிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை, தரப்படுத்தல், மதிப்பீடு, பழுதுபார்ப்பு, திரும்பப் பெறுதல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்கள் போன்றவற்றிற்கு மட்டும் எந்தவித உரிமமும் அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்வாறு, வெளிநாட்டு மின்சாதன பொருட்களின் இறக்குமதி குறைந்தால் இந்தியாவில் லேப்டாப்கள், கணினி மற்றும் டேப்லெட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Tags :
|