Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலை நிறுத்த போராட்டம்... இன்று முதல் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது?

வேலை நிறுத்த போராட்டம்... இன்று முதல் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது?

By: Nagaraj Thu, 26 Jan 2023 06:55:01 AM

வேலை நிறுத்த போராட்டம்... இன்று முதல் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது?

புதுடில்லி: இன்று முதல் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது?... குடியரசு தின விழா மற்றும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக இன்று முதல் வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30ம் தேதி (திங்கள்) மற்றும் 31ம் தேதி (செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினங்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொது வங்கிகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஐந்து நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்துதல், அனைத்து பணியாளர்களிலும் போதுமான ஆட்சேர்ப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல அம்சங்களை கோரி வருகிற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்தநிலையில், மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் போராட்டம் அறிவித்த சங்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சமரச பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.

banking services,vulnerability,struggle,negotiation,five days ,வங்கி சேவைகள், பாதிப்பு, போராட்டம், பேச்சுவார்த்தை, ஐந்து நாட்கள்

இதையடுத்து, திட்டமிட்டப்படி வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பணியாளர் சம்மேளன பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், வங்கி ஊழியர்கள் அனைவரும் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி, 4வது சனிக்கிழமை என்பதாலும், அன்றைய தினமும் மறுநாள் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாளாகும். இடையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும். வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

Tags :