Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டனில் உள்ள சீனா காவல் நிலையங்களை மூட கடுமையாக வலியுறுத்தல்

பிரிட்டனில் உள்ள சீனா காவல் நிலையங்களை மூட கடுமையாக வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 07 June 2023 08:47:38 AM

பிரிட்டனில் உள்ள சீனா காவல் நிலையங்களை மூட கடுமையாக வலியுறுத்தல்

பிரிட்டன்: பாதுகாப்பு அமைச்சர் தகவல்... பிரிட்டன் மண்ணில் உள்ள ரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரிட்டன் அரசு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகேன்தட் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.

சீனத் தூதரகம் மூலமாக இங்கிலாந்தில் சீனா காவல்நிலையங்களை நடத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

england,china,police station,do not run,answer,security ,இங்கிலாந்து, சீனா, காவல்நிலையம், இயக்கக்கூடாது, பதில், பாதுகாப்பு

எந்த வடிவிலும் சீனா தனது காவல் நிலையத்தை இயக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே இருந்த அத்தனை நிலையங்களும் மூடப்பட்டு விட்டன.

இங்கிலாந்து சட்டத்திற்குட்பட்டு செயல்படுவோம் என்றும் சீனத்தூதரகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சீனா தனது காவல் நிலையத்தை மூடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபடியே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|