Advertisement

பலத்த காற்று .. மீனவர்களுக்கு எச்சரிக்கை

By: vaithegi Mon, 05 Sept 2022 5:55:39 PM

பலத்த காற்று ..  மீனவர்களுக்கு  எச்சரிக்கை

சென்னை: மீனவர்களுக்கான எச்சரிக்கை: 05.09.2022 முதல்‌ 07.09.2022 வரை: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள கடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகள் மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌.

இதை அடுத்து 08.09.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌.

fishermen,beware ,மீனவர்கள்,எச்சரிக்கை

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகள் மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்துடன் இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேலும் 09.09.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்‌ அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌.

Tags :