Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் உள்ள சீன தூதரகம் அருகே இந்திய வம்சாவளியினர் போராட்டம்

கனடாவில் உள்ள சீன தூதரகம் அருகே இந்திய வம்சாவளியினர் போராட்டம்

By: Karunakaran Mon, 27 July 2020 10:17:42 AM

கனடாவில் உள்ள சீன தூதரகம் அருகே இந்திய வம்சாவளியினர் போராட்டம்

சீனாவைச் சேர்ந்த ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஷோவை, அமெரிக்க வாரண்டின் அடிப்படையில், 2018ம் ஆண்டு கனடா அரசு கைது செய்ததில் இருந்து சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் பிளவு அதிகரித்தது.

அதன்பின், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரி மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோரை சீனா கைது செய்தது. இதனை கண்டித்தும், சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் விரிவாக்க கொள்கைகளை கண்டித்தும் கனடாவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

protest,indian descent,chinese embassy,canada ,எதிர்ப்பு, இந்திய வம்சாவளி, சீன தூதரகம், கனடா

தற்போது, வான்கூவரில் உள்ள சீன தூதரகம் அருகே நேற்று தீவிர போராட்டம் நடைபெற்றது. இந்திய வம்சாவளியினர், கனடா திபெத் குழு மற்றும் திபெத்திய சமூகம், கனடா மற்றும் இந்தியா அமைப்பின் நண்பர்கள், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு, வான்கூவர் சொசைட்டி, வான்கூவர் உய்குர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது, சீனாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்த போராட்டத்தில் ஒவ்வொரு அமைப்பின் சார்பிலும் அதிகபட்சம் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

Tags :