Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

By: Monisha Wed, 29 July 2020 1:50:57 PM

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் இந்த கல்வி ஆண்டில் எப்போது திறக்கப்படும்? மாணவர் சேர்க்கை எப்போது துவங்கும்? போன்ற வினாக்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுதொடர்பாக கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :