Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது விவரங்களை இந்த தேதி வரை இணையதளத்தில் மாற்றம் செய்யலாம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது விவரங்களை இந்த தேதி வரை இணையதளத்தில் மாற்றம் செய்யலாம்

By: vaithegi Mon, 06 Feb 2023 5:20:20 PM

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது விவரங்களை இந்த தேதி வரை இணையதளத்தில் மாற்றம் செய்யலாம்

சென்னை: பிப்ரவரி 10ம் தேதி வரை இணையதளத்தில் மாற்றம் செய்யலாம் ..... தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் தான் 10, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் முழுமையான பாடத்திட்டத்தின் படி பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

எனவே இதற்காக நடப்பு கல்வி ஆண்டில் ஆரம்பம் முதல் மாணவர்களுக்கு கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் ஜனவரி முதல் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு க்கொண்டு வருகின்றனர்.

public examination,students ,பொதுத்தேர்வு ,மாணவர்கள்

இந்த நிலையில் ஜனவரி மாதத்தின் பிற பிற்பகுதியில் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளது. எனவே இதற்காக மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தேர்வு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை பிப்ரவரி 10-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் முறைப்படி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக, தேர்வு துறை இயக்குனர் சேதுராம வருமா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Tags :