Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டம் .. மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டம் .. மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Mon, 20 Mar 2023 2:11:30 PM

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டம் ..   மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: 2023-24 கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டத்தின் மூலமாக 25 சதவிகிதம் மாணவர் சேர்க்கைக்கு இன்று (மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியீடு.

தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ம் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவிகித இடங்களில் சேர 2003-ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.

apply,compulsory education scheme,student ,விண்ணப்பிக்கலாம் , கட்டாய கல்வி திட்டம்,மாணவர்

எனவே அதன் படி ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 20- ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள் அறியும் வகையில் தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் படி சேரும் மாணவர்களின் அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|