Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Wed, 30 Nov 2022 10:36:06 PM

மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ... தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதனை அடுத்து கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

scholarship,post graduate ,கல்வி உதவித்தொகை ,பட்ட மேற்படிப்பு

அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :