Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை 3-ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம்

மாணவர்கள் பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை 3-ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம்

By: vaithegi Wed, 01 Mar 2023 6:49:02 PM

மாணவர்கள் பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை  3-ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை வருகிற 3-ம் தேதி முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , மார்ச்/ஏப்ரல் 2023 நடைபெறவுள்ள, மேல்நிலை 2-ம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள் வரும் 3-ம் தேதி பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று “online-portal” என்ற வாசகத்தினை “Click” செய்ய வேண்டும்.

public examination,students ,பொதுத்தேர்வு ,மாணவர்கள்

அதன் பின்னர் “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH/APRIL 2023″ என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் பற்றி முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை 2-ம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். எனவே இதற்கு அனைத்து தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :