Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் திறனாய்வு தேர்வின் ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கலாம்

மாணவர்கள் திறனாய்வு தேர்வின் ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கலாம்

By: vaithegi Wed, 27 Sept 2023 3:26:02 PM

மாணவர்கள் திறனாய்வு தேர்வின் ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கலாம்


சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல்வர் தொடங்கி வைத்துள்ள 11 -ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நடக்கவுள்ளது.

இதையடுத்து மாணவர்கள் உயர் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வருடம் தோறும் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலமாக 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் 1000 பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகையானது அவர்களின் இளங்கலை பட்டப்படிப்பு வரை அளிப்பதற்கு அரசு முடிவு செய்து உள்ளது.

hall ticket,students,aptitude test ,ஹால் டிக்கெட் ,மாணவர்கள் ,திறனாய்வு தேர்வு

நடப்பாண்டு அக்டோபர் 7-ம் தேதி அன்று திறனாய்வு தேர்வுகள் நடக்க உள்ளது. திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள மாணவர்கள்

dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


Tags :