Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளஸ் 1 மொழிப்பாடத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிப்பு

பிளஸ் 1 மொழிப்பாடத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிப்பு

By: vaithegi Wed, 15 Mar 2023 3:10:52 PM

பிளஸ் 1 மொழிப்பாடத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிப்பு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 3,184 மையங்களில் 7.5 லட்சம் பேர் எழுதினர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 40,000-க்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இதனை அடுத்து முதல் நாளான நேற்று மொழிப்பாடத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 90 மதிப்பெண்களுக்கான இத்தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 1 மதிப்பெண் கேள்விகள் தவிர மற்ற பகுதிகள் எளிதாக பதிலளிக்கும் விதத்தில் இருந்தன. சராசரி மாணவர்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

students,language test ,மாணவர்கள் , மொழிப்பாடத் தேர்வு

பிளஸ் 1 பொதுத்தேர்வு ஏப்.5-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியிடப்பட உள்ளன.இதேபோன்று, பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்தேர்வு இன்று (மார்ச் 15) நடைபெற உள்ளது.

இதையடுத்து இந்த தேர்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 3,185 மையங்களில் 8.6 லட்சம் பேர் எழுதவுள்ளனர். சென்னையில் மட்டும் 46,932 பேர் எழுதுகின்றனர். பொதுத்தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க தேர்வுத் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :