Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு துறைகளில் தங்களது திறமை வளர்த்து கொள்ள வேண்டும் ..அன்பில் மகேஷ்

மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு துறைகளில் தங்களது திறமை வளர்த்து கொள்ள வேண்டும் ..அன்பில் மகேஷ்

By: vaithegi Tue, 26 July 2022 6:26:58 PM

மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு துறைகளில் தங்களது திறமை வளர்த்து கொள்ள வேண்டும் ..அன்பில் மகேஷ்

சென்னை: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன் பெரும் வகையில் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் செயல்திறனை உயர்ந்த வழிவகை செய்தி கொண்டும் வருகிறது.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வித்துறை சார்பாக உலக திறனாய்வு உடன் திறன் தெரிவுப்போட்டிகள் நடைபெற்றது. மேலும் இந்த போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

students,anpil mahesh,department of sports ,மாணவர்கள் ,அன்பில் மகேஷ், விளையாட்டு துறை

மேலும் நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், 6,7,8 ம் வகுப்பு மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு ஆகிய துறைகளில் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என கூறினார்.

குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ளும் போது தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலம் ஏற்படும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதன் காரணமாக படிப்பிலும் நல்ல கவனம் செலுத்த முடியும் என்று கூறினார். உலக திறனாய்வு உடற்திறன் தெரிவுபோட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலி மூலம் மாணவர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்வதோடு விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிகல்விதுறையே ஏற்கும் என்று தெரிவித்தார்.

Tags :