Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; குமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; குமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

By: Monisha Thu, 17 Sept 2020 4:12:58 PM

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; குமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப்பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம்.

college,students,scholarship,postgraduate,polytechnic ,கல்லூரி,மாணவர்கள்,கல்வி உதவித்தொகை,முதுகலை,பாலிடெக்னிக்

ஏற்கனவே உதவித்தொகை பெற்று அதனை புதுப்பிப்பது நவம்பர் மாதம் 10-ந் தேதியும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் நவம்பர் 30-ந் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அதில் மாணவர்கள் தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பர் மாதம் 15-ந் தேதியன்று கல்வி உதவித்தொகை இணைய தளத்தில், மாணவர்களின் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 15-ந் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்கவேண்டும். இதேபோல் புதிதாக உதவி தொகை கோருபவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் டிசம்பர் 16-ந் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 31-ந் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு இணைய தளமான www.tn.gov.in/bcmbcdept -ல் இத்திட்டங்கள் குறித்து விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags :