Advertisement

மாணவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை

By: vaithegi Thu, 13 Apr 2023 2:00:27 PM

மாணவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை

சென்னை: தமிழக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த வாரம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையடுத்து இறுதி தேர்வு வர இருக்கும் நிலையிலும், மாணவர்கள் தொடர் விடுமுறை என்ற அறிவிப்பு வந்தவுடன் மகிழ்ச்சி அடைந்தனர். அதே போன்று , இந்த வாரத்திலும், தொடர் விடுமுறை தினங்கள் வரவுள்ளது.

அதாவது ஏப்ரல் 14-ம் தேதி வெள்ளி கிழமை சித்திரை 1 முதல் நாள் – தமிழ் புத்தாண்டு தினம், சனி மற்றும் ஞாயிற்று கிழமை வழக்கமான விடுமுறை தினங்கள்.

continuity leave,exam ,தொடர் விடுமுறை ,தேர்வு

ஆகையால், 3 நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வரவுள்ளது. இதன்பிறகு, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பமொழிக்கான பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :