Advertisement

நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கல்

By: Nagaraj Fri, 10 Feb 2023 11:47:37 PM

நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கல்

புதுடெல்லி: விண்ணப்பம் வழங்கல்... மத்திய பல்கலைக்கழகங்களில் 2023-ம் ஆண்டு இளங்கலை பிரிவில் சேர்வதற்கான CUET நுழைவுத் தேர்வு மே 21 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் நேற்று இரவு தொடங்கியது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், “CUET நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (நேற்று) இரவு முதல் தொடங்குகிறது. மார்ச் 12-ஆம் தேதி விண்ணப்பப் பதிவுக்கு கடைசி நாள்.

application,quet entrance exam,the beginning, ,ஆரம்பம், கியூட் நுழைவு தேர்வு, விண்ணப்பம்

தேர்வு நடைபெறும் 30 இடங்களின் பட்டியல் ஏப்ரலில் வெளியிடப்படும். அட்மிட் கார்டுகளை மே இரண்டாவது வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,” என்றார்.

2023 கியூட் தேர்வு 13 மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படும் என்றார்.

Tags :