Advertisement

சிலியில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

By: Nagaraj Tue, 01 Sept 2020 7:45:11 PM

சிலியில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிலியில் இன்று அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளாவது: சிலியில் இன்று அதிகாலை 12.09 மணியளவில் (சிலி நேரப்படி) 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கமானது வலேனருக்கு வடகிழக்கில் 78 கிலோமீட்டரில் மையத்தில் ஏற்பட்டது.

chile,pacific ocean,volcanic eruption,damage ,சிலி, பசிபிக் பெருங்கடல், எரிமலை வெடிப்பு, சேதங்கள்

சில நிமிடங்களில் இரண்டாவது நிலநடுக்கமானது 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது தலைநகர் சாண்டியாகோ தெற்கே 1,330 கிலோமீட்டர் மையத்தில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீட்டிற்குள் இருக்கும் பொருள்கள் விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, மின்சார சேவைகள் அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டது.

மேலும், சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி குறித்த எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. சிலி, பசிபிக் பெருங்கடலில் உள்ள 'ரிங் ஆஃப் ஃபயர்' என்ற பகுதியில் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பால் பாதிப்புக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|