Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை

வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை

By: Nagaraj Fri, 02 Oct 2020 6:29:38 PM

வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை

அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும்... சென்னையில் 5ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பணியாளர்களுக்காக குறைந்த அளவில் புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அத்தியாவசியப் பணியாளர்கள் என்று மாநில அரசு அங்கீகரித்துள்ள நபர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும்.

coming up on the 5th,train service,staff,suburbs ,வரும் 5ம் தேதி, ரயில்சேவை, பணியாளர்கள், புறநகர்

பயண அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தால்தான், ரயில் நிலையத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் யாரும் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு ரயில் டிக்கெட் வழங்கப்படாது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் , அத்தியாவசியப் பணியாளர்களுக்காக மட்டும் அக்டோபர் 5 முதல் ரயில் சேவை தொடங்க உள்ளது .

Tags :
|