Advertisement

கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனை வெற்றி

By: Nagaraj Tue, 28 July 2020 10:18:10 AM

கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனை வெற்றி

இரண்டாம் கட்ட சோதனை... கொரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் வெகு மும்முரமாக உள்ளன. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து தயாரிக்கு தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை உடனே கட்டுப்படுத்த வேண்டும் என உலகம் முழுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னிலை வகிக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு இதில் நம்பிக்கை அளிக்கும் முடிவுகள் வந்துள்ளது. ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றி பெற்றுள்ளது.

corona,vaccine,tamil nadu,india,london ,கொரோனா, தடுப்பு மருந்து, தமிழகம், இந்தியா, லண்டன்

இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதனால தற்போது கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் மிக முக்கியமான கட்டத்தில் மனித குலம் இருக்கிறது. இந்த ஆஸ்டெராசெனெகா நிறுவனம் தனது மருந்து உற்பத்திக்காக இந்தியாவை நாடி இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உடன் இணைந்து ஆஸ்டெராசெனெகா இந்த மருந்து உற்பத்தியை செய்கிறது.

வெறும் ஆயிரம் ரூபாய்க்கு இந்த மருந்தை விற்பனை செய்ய சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்கிறார்கள். தற்போது இந்த மருந்தின் இறுதிக்கட்ட சோதனை லண்டனில் நடந்து வருகிறது. 10 ஆயிரம் பேர் இதில் சோதனை செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் 5 இடங்களில் இந்த வேக்சின் சோதனையை செய்ய உள்ளனர்.

இந்த மருந்து இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறுகிறார்கள். அதற்கு முன் இந்த மருந்தை 3 கட்ட சோதனை செய்ய வேண்டும். இந்திய மக்களிடம் மருந்தை சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் மருந்தின் வீரியம், பயன் இந்தியர்கள் மீது எப்படி இருக்கிறது என்று தெரியும். விரைவில் தமிழகத்திலும் இந்த மருந்து சோதனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

Tags :
|
|