Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

By: Karunakaran Sat, 18 July 2020 1:04:21 PM

அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அமெரிக்காவில் ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

கடந்த மே மாதத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணை குறித்து தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். தற்போது அமெரிக்க ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

hypersonic missile,testing,america,faster than sound ,ஹைப்பர்சோனிக் ஏவுகணை, சோதனை, அமெரிக்கா, ஒலியை விட வேகம்

இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அடுத்த 4 ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடலில் குறைந்தது 40 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவி சோதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 30-ந் தேதி நவீனமயமாக்கலுக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பொறியியல் துறை இயக்குனர் மார்க் லுயிஸ் பேட்டி அளித்தபோது, 2025-ம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட ஹைபர்சோனிக் முன்மாதிரி ஆயுதங்களின் சோதனை முடிவடையும். அதன் பிறகு அந்த ஆயுதங்கள் படையில் சேர்க்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags :