Advertisement

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட கல்பனா சாவ்லா விண்கலம்

By: Nagaraj Sun, 04 Oct 2020 4:34:22 PM

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட கல்பனா சாவ்லா விண்கலம்

வெற்றிகரமாக விண்ணுக்கு புறப்பட்ட கல்பனா சாவ்லா விண்கலம்... சா்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருள்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் நாா்த்ராப் கிரமன் நிறுவனம் உருவாக்கி ‘கல்பனா சாவ்லா’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சா்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவைப்படும் பொருள்களை ஏற்றிக் கொண்டு, கடந்த 2003-ஆம் ஆண்டு விண்வெளி விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரிடப்பட்ட விண்கலத்தை தனது ‘சிக்னஸ்’ ராக்கெட் மூலம் வா்ஜீனியா மாகாணம், வாபாப்ஸ் தீவிலுள்ள ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டிருந்தது.

kalpana chawla,spacecraft,research center,radish seeds ,கல்பனா சாவ்லா, விண்கலம், ஆய்வு மையம், முள்ளங்கி விதைகள்

எனினும், மோசமான வானிலை காரணமாக அந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பிறகு வானிலை சரியானதைத் தொடா்ந்து அந்த விண்கலம் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

அந்த விண்கலத்தில், விண்வெளியில் நடக்கும்போது பயன்படுத்துவதற்கான 360 டிகிரி கோண கேமரா, பெண்களுக்கு ஏற்ற வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கழிவறை, பல வகையான உணவுப் பொருள்கள், விண்வெளியில் பயிரிடுவதற்கான முள்ளங்கி விதைகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது.

அந்தப் பொருள்களுடன் எஸ்எஸ் கல்பனா சாவ்லா விண்கலம் சா்வதேச விண்வெளி ஆய்வ மையத்தை திங்கள்கிழமை சென்றடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :