Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பட்டாசு குடோனில் திடீர் தீவிபத்து: ரூ.65 லட்சம் மதிப்பு பட்டாசுகள் சாம்பல்

பட்டாசு குடோனில் திடீர் தீவிபத்து: ரூ.65 லட்சம் மதிப்பு பட்டாசுகள் சாம்பல்

By: Nagaraj Wed, 30 Aug 2023 5:59:40 PM

பட்டாசு குடோனில் திடீர் தீவிபத்து: ரூ.65 லட்சம் மதிப்பு பட்டாசுகள் சாம்பல்

கர்நாடகா: பட்டாசு குடோனில் தீவிபத்து... கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சாம்பல் ஆயின.

ஹாவேரி நகரில் தனியாருக்கு சொந்தமான பூமிகா பட்டாசு குடோனில் சிவகாசியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

fire,first phase,investigation,electrical leakage,fire department,gutton ,தீவிபத்து, முதல்கட்டம், விசாரணை, மின்கசிவு, தீயணைப்புத்துறை, குடோன்

இந்த நிலையில் திடீரென குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என தெரிய வந்துள்ளது.

Tags :
|