Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோபிடனுக்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு திடீரென அதிகரிப்பு

ஜோபிடனுக்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு திடீரென அதிகரிப்பு

By: Nagaraj Sat, 07 Nov 2020 7:16:34 PM

ஜோபிடனுக்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு திடீரென அதிகரிப்பு

பாதுகாப்பு அதிகரிப்பு... அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடன் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில், அவருக்கான சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று மாலைக்குள் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஜார்ஜியாவில் அதிபர் டிரம்ப் பின்னடைவை சந்தித்து உள்ளதால்.. அங்கு பிடன் வெற்றிபெற வாய்ப்புள்ளது. இதனால் அதிபர் தேர்தலிலும் பிடன் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

security,chancellor,wellington,secret service,jobidan ,பாதுகாப்பு, அதிபர், வெல்மிங்டன், சீக்ரெட் சர்வீஸ், ஜோபிடன்

அதிபர் தேர்தலில் வெற்றிபெற இருக்கும் பிடன்.. இன்று முக்கியமான உரை நிகழ்த்த உள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு பிடன் உரை நிகழ்த்த வாய்ப்புள்ளது. தற்போது பிடன் அமெரிக்காவின் டெலவரில் உள்ள வெல்மிங்டன் பகுதியில் இருக்கிறார். அங்கு இருக்கும் தனது பிரச்சார குழுவின் அரங்கில்தான் பிடன் தனது கட்சியினருடன் இருக்கிறார்.

பிடன் மேலும் ஒருநாள் இதே இடத்தில் தங்கி இருக்க வாய்ப்புள்ளது. இன்று இரவு தனது வெற்றி குறித்து பிடன் உரை நிகழ்த்துவார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடன் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில், அவருக்கான சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு படையினர் இதற்காக வெல்மிங்டன் நோக்கி விரைந்துள்ளனர்.

ஏறக்குறைய அதிபர் டிரம்பிற்கு கொடுப்பதற்கு இணையான பாதுகாப்பு பிடனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிடன்தான் அடுத்த அதிபர் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதால் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிரம்ப்பின் பாதுகாப்பு எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை.

Tags :