Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தகுதி இல்லாதவர்களை பணி நியமனம் செய்ய கூடாது திடீர் உத்தரவு..

தகுதி இல்லாதவர்களை பணி நியமனம் செய்ய கூடாது திடீர் உத்தரவு..

By: Monisha Thu, 30 June 2022 9:36:44 PM

தகுதி இல்லாதவர்களை பணி நியமனம் செய்ய கூடாது  திடீர் உத்தரவு..

தமிழ்நாடு: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரயர் பணி இடங்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணி இடங்கள் என 13,331 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு இந்த இடத்தை நிரப்ப தற்காலிகமாக ஆள் சேர்க்கப் படுகின்றனர்.

இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடை நிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 7,500 , பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 , முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்12,000 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இப்பணி இடங்களை பெற்றோர் ஆசரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிமாக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

teacher,unqualified,school,salary ,ஊராட்சி,  தொடக்கப்பள்ளி,ஆசிரியர்,நியமனம்,

இந்நிலையில் இப்பணி இடங்கள் நிரப்பும் பணியை நிறுத்த வேண்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோரிக்கை வந்து உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தர்வுவிட்டுள்ளார்.
ஆனால், தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்த காரணத்தினால் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பலல்வேறு மாவட்டங்களில் உத்தரவு விட்டு உள்ளனர்.

இதனால் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|