Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி.க்கு திடீரென மூச்சுத்திணறல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி.க்கு திடீரென மூச்சுத்திணறல்

By: Karunakaran Sat, 15 Aug 2020 1:58:22 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி.க்கு திடீரென மூச்சுத்திணறல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரையுமே கொரோனா பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த நடிகை நவ்னீத் ராணாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை நவ்னீத் ராணா தற்போது மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். அண்மையில் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டபோது, அவருக்கும், அவரது கணவரும், எம்.எல்.ஏ.வுமான ரவிராணா, குழந்தைகள் என குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

suffocation,navneet rana mp,corona virus,mumbai ,மூச்சுத் திணறல், நவ்னீத் ராணா எம்.பி., கொரோனா வைரஸ், மும்பை

வீட்டில் இருந்த படியே நவ்னீத் ராணா சிகிச்சை பெற்று வந்தநிலையில், நவ்னீத் ராணா உடல் நலம் சரியாகாததால், கடந்த 6-ந்தேதி நாக்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நவ்னீத் ராணாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அதன்பின் அவர், மும்பையில் உள்ள லீலாவதி தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டார். அவருடன் கணவர் ரவி ராணாவும் மும்பை வந்தார். தற்போது லீலாவதி தனியார் ஆஸ்பத்திரியில் நவ்னீத் ராணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :