Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சாவூரில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா

தஞ்சாவூரில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா

By: Nagaraj Wed, 17 May 2023 10:13:37 AM

தஞ்சாவூரில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் எஸ். எஸ். பழநிமாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்த கோடைகால பயிற்சி முகாமானது கடந்த மே 2-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த பயிற்சியில் வாலிபால், தடகளம், கூடைபந்து ஆகிய போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

training,camp,closing ceremony,secretary,participated ,பயிற்சி, முகாம், நிறைவு விழா, செயலாளர், பங்கேற்றனர்

இதில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களிடம் அவர்கள் கற்றுக் கொண்டது மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் ராஜ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், வாலிபால் மண்டல முதுநிலை மேலாளர் காந்தி மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Tags :
|