Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசாவில் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடக்கம்

ஒடிசாவில் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடக்கம்

By: vaithegi Thu, 20 Apr 2023 1:11:40 PM

ஒடிசாவில் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடக்கம்

ஒடிசா: 2022 – 2023ஆம் கல்வி ஆண்டு தான் கிட்டத்தட்ட 2, 3 ஆண்டு கொரோனா கால ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு பிறகு முழுவதுமாக நடந்துள்ளது.

இதனால் மாணவர்கள் ஆரம்பம் முதலே, மிகவும் ஆர்வமாக தான் பள்ளிக்கு சென்று வந்தனர். வழக்கம் போன்று, இறுதி தேர்வுக்கான அட்டவணைகள் முன்னதாக வெளியிடப்பட்டு, திட்டமிட்டபடி தேர்வுகள் நடந்து கொண்டு வருகின்றது.

ஆனால் இந்த வருடம் கோடை கால வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

summer vacation,odisha ,கோடை விடுமுறை,ஒடிசா

இதனால், ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து கல்வித்துறை விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :