Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் அதிகளவு வெப்பநிலை காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 26 வரை நீட்டிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் அதிகளவு வெப்பநிலை காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 26 வரை நீட்டிப்பு

By: vaithegi Tue, 21 June 2022 9:32:08 PM

மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் அதிகளவு வெப்பநிலை காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 26 வரை நீட்டிப்பு

மேற்கு வங்கம்: மாநிலத்தில் தற்போது நிலவி வரும் வெப்ப அலை நிலைமைகளை கவனத்தில் கொண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை வரும் ஜூன் 26ம் தேதி வரை நீட்டித்து மேற்கு வங்க மாநில அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இப்போது மேற்கு வங்க மாநில அரசு, அதிகளவு வெயிலின் காரணமாக பள்ளிகளுக்கு நீண்ட கோடை விடுமுறையை அறிவித்ததால் மாணவர்கள் வகுப்பறையில் அனுபவிக்கும் பொன்னான நேரத்தை இழப்பதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், மேற்கு வங்க மாநிலத்தில் வழக்கான கோடை விடுமுறை மே மாதத்தின் நான்காவது வாரத்தில் இருந்து ஜூன் முதல் வாரத்தின் இறுதி வரை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் மே 2 அன்று மூடப்பட்டு ஜூன் 26 மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

summer vacation,parents,teachers schools ,கோடை விடுமுறை,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் பள்ளிகள்

அதாவது கிட்டத்தட்ட எட்டு வாரங்களுக்கு பள்ளிகளுக்கான கோடை விடுமுறைகள் உள்ளன. இது தேவையில்லாத பள்ளி நாட்களின் இழப்பு என்றும் இதன் மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

இது தவிர அடுத்து வரும் துர்கா பூஜைக்கு பள்ளிகள் மீண்டும் அடைக்கப்படுவதற்கு முன் அவர்களுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே வகுப்புகள் இருக்கும் என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை ஜூன் 13 முதல் ஜூன் 26 வரை நீட்டித்து மாநில அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்ட நிலையில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான புதிய வகுப்புகளை கடந்த ஜூன் 20ம் தேதி முதல் மீண்டும் திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :