Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை விடுமுறை ... தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறை ... தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Thu, 20 Apr 2023 3:28:25 PM

கோடை விடுமுறை   ...  தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கம்


சென்னை : தமிழகத்தில் வழக்கமாக சனி, ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறை நாட்களில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை உயரும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இருந்து கோடை விடுமுறை வரவுள்ளதால் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பர் இதனால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் மேலும் அதிகரிக்கும்.

எனவே இதனை கருத்தில் கொண்டு பயணிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் தாம்பரம் – திருநெல்வேலி இடையே ரயில் (06021) ஏப் – 27 மே 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

special trains,summer holidays ,சிறப்பு ரயில்கள்,கோடை விடுமுறை

அதே போன்று திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையேயான சிறப்பு ரயில் மே 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதனை தொடர்ந்து நாகர்கோவில் – தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் (06044) உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த சிறப்பு ரயில்கள் புறப்படும் நேரம், சென்றடையும் நேரம், பயணிக்கும் வழித்தடங்கள் குறித்த அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து பயணிகள் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு பயணத்தை திட்டமிடலாம்.


Tags :