Advertisement

அதிதீவிர ‘மோக்கா’புயல் இன்று கரையை கடக்கிறது

By: vaithegi Sun, 14 May 2023 09:55:47 AM

அதிதீவிர ‘மோக்கா’புயல் இன்று கரையை கடக்கிறது

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோக்கா” புயல் நேற்று முன்தினம் காலை மிகத்தீவிர புயலாக மாறியது. இந்த நிலையில் மோக்கா புயல் நேற்றி காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது.

இதனை அடுத்து இந்த புயலானது மியான்மர் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மோக்கா புயலால் தமிழகத்திற்கு எந்த விளைவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 16 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

mocha,tamil nadu,puducherry,karaikal ,மோக்கா,  தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

இந்த நிலையில் அதிதீவிர புயலாக நிலவிவரும் ‘மோக்கா’ இன்று தென்கிழக்கு வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கிறது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 180 முதல் 190 கி9.மீ வேகத்திலும் , இடையிடையே 210 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்குமெனவும் கணித்து உள்ளது.

Tags :
|