Advertisement

ட்விட்டரில் விரைவில் வருகிறது சூப்பர் அப்டேட்

By: Nagaraj Sun, 18 June 2023 9:08:20 PM

ட்விட்டரில் விரைவில் வருகிறது சூப்பர் அப்டேட்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஸ்மார்ட் டிவிக்களுக்கான ட்விட்டர் வீடியோ ஆப்ஸ் விரைவில் வரப் போகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலக பணக்காரர்களில் முதல்வரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ட்விட்டரை வாங்கினார். அதன் உரிமையாளரான பிறகு, அவர் பல அதிரடி மாற்றங்களைச் செய்தார். உயர்மட்ட ஊழியர்கள் உட்பட பலரை பணி நீக்கம் செய்தார்.

ட்விட்டரில் பணம் செலுத்தும் சந்தாதாரர் வசதியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், ராபின்சன் என்ற கணக்குப் பெயரைக் கொண்ட ட்விட்டர் பயனர் ஒருவர், நமக்கு உண்மையிலேயே தேவைப்படுவது ஸ்மார்ட் டிவிகளுக்கான ட்விட்டர் வீடியோ ஆப்ஸ்தான் என்கிறார்.

introduction,processor,smart,tv,twitter,video , அறிமுகம், செயலி, டி.வி, டுவிட்டர், வீடியோ, ஸ்மார்ட்

டுவிட்டரில் ஒரு மணிநேரம் ஓட கூடிய வீடியோவை என்னால் காண முடியவில்லை என பதிவிட்டு உள்ளார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், அது வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்து உள்ளார். இதற்கு அந்த நபர், பாராட்டுகிறேன். யூடியூப்புக்கான சந்தாவை ரத்து செய்து விட்டு, பின்னர் ஒரு போதும் அதனை திரும்பி பார்க்காத ஒரு நாள் வரும். அதனை நான் பார்க்க முடியும் என பதிவிட்டு உள்ளார்.

டுவிட்டரில் மஸ்க், பல மாற்றங்களை செய்து வருகிறார். அவர் நேற்று, சில வாரங்களில், புதிய விசயங்களை உருவாக்கி டுவிட்டரில் பதிவிடுபவர்களான கிரியேட்டர்களுக்கு விளம்பரங்கள் வரும்போது, அவர்களுக்கு பணம் அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். அந்த புதிய உருவாக்கும் திறன் வாய்ந்த கிரியேட்டர், டுவிட்டரால் ஆய்வு செய்யப்பட்ட நபராக இருக்க வேண்டும்.

ஆய்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு அளிக்கப்படும் விளம்பரங்களாகவும் அவை இருக்க வேண்டும். அந்த, எண்ணிக்கையே கணக்கில் கொள்ளப்படும் என மஸ்க் பதிவிட்டார். இதேபோன்று, டுவிட்டரில் ஆய்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், 2 மணிநேரம் ஓட கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|
|