Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆதரவு கொடுங்கள்... டென்மார்க் அரசுக்கு கோரிக்கை விடுத்த உக்ரைன்

ஆதரவு கொடுங்கள்... டென்மார்க் அரசுக்கு கோரிக்கை விடுத்த உக்ரைன்

By: Nagaraj Wed, 15 June 2022 11:58:53 PM

ஆதரவு கொடுங்கள்... டென்மார்க் அரசுக்கு கோரிக்கை விடுத்த உக்ரைன்

உக்ரைன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்துள்ளோம். இதற்கு டென்மார்க் ஆதரவு தர வேண்டும் என உக்ரைன் ஜானதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உக்ரைனைப் பரிந்துரைக்க தயங்கும் நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று. உக்ரைனுக்கு ஒரு வேட்பாளர் அந்தஸ்து வழங்குவது குறித்து டென்மார்க்கில் நிச்சயமற்ற நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் வேட்பாளர் நிலைக்கு ஆதரவு தெரியுங்கள் என்று டென்மார்க்கை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: "ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனின் வேட்பாளர் நிலையை, மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து வலுவாகவும், ஐக்கியமாகவும் டென்மார்க் இருக்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன்.

உக்ரைனுக்கு டென்மார்க்கின் ராணுவ உதவி அவசியமானது. இது எங்களது நாட்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வரைவு தோற்றம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|