Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்புக்கு ஆதரவாக நடந்த படகு அணிவகுப்பில் ஏராளமான படகுகள் மூழ்கியதால் ஆதரவாளர்கள் கலக்கம்

டிரம்புக்கு ஆதரவாக நடந்த படகு அணிவகுப்பில் ஏராளமான படகுகள் மூழ்கியதால் ஆதரவாளர்கள் கலக்கம்

By: Karunakaran Sun, 06 Sept 2020 4:25:33 PM

டிரம்புக்கு ஆதரவாக நடந்த படகு அணிவகுப்பில் ஏராளமான படகுகள் மூழ்கியதால் ஆதரவாளர்கள் கலக்கம்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் தற்போதைய அதிபர் டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இதனால் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து டெக்சாஸ் மாநிலத்தில் அவரது ஆதரவாளர்கள் படகு அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

டெக்சாஸ் தலைநகர் ஆஸ்டினுக்கு அருகில் உள்ள டிராவிஸ் ஏரியில் நேற்று இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று படகுகளை உற்சாகத்துடன் செலுத்தினர். அப்போது பல்வேறு படகுகள் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கியதால், பயணித்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதனால் அங்கு திடீரென பதற்றம் நிலவியது.

supporters,numerous boats sank,boat rally,trump ,ஆதரவாளர்கள், படகுகள் மூழ்கின, படகு பேரணி, டிரம்ப்

இதுபற்றி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் ஏரியில் ரோந்து பணியில் ஈடுபடும் சிறப்பு குழுவினர் விரைந்து சென்று, தண்ணீரில் விழுந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வரவில்லை. இருப்பினும், உற்சாகத்துடன் புறப்பட்ட படகு அணிவகுப்பு சோகத்தில் முடிந்தது.

ஏரியில் சில சமயங்களில் படகுகளை செலுத்துவது கடினமாக இருக்கும். மேலும் படகு அணிவகுப்பின் போது பெரிய அலைகள் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதேபோல், புளோரிடா மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் "டிரம்ப் படகு அணிவகுப்புகள்" நடைபெற்று வருகின்றன.

Tags :