Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் உச்சநீதிமன்ற கிளை... முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை... முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

By: Nagaraj Sat, 06 Aug 2022 6:46:50 PM

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை... முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் வலியுறுத்தல்... உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில், மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது: 1996 திமுக ஆட்சியில் தான் தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. தனிமனிதனின் சுயமரியாதையாக இருந்தாலும், ஒரு இனத்தின் தன்மானமாக இருந்தாலும் பாதிக்கப்பட கூடாது.

மானுட கூட்டத்தின் உரிமைகளாக இருந்தாலும் அவை எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் பாதிக்க கூடாது. சுயமரியாதைதான் ஒவ்வொரு மனிதனுக்கு முக்கியம். மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான்

அரசியலமைப்பு சட்டத்தின் மிக மிக அடிப்படை என்பது மனித உரிமைகள் தான்.சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்டவற்றை காக்கும் உரிமை அனைத்து அரசுக்கும் உண்டு.தமிழக அரசு சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, சமூக நீதியின் அரசாக செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படும். மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் இருந்து ஒரு நாளும் தவற மாட்டோம்.

presentation of award,principal,collector,chennai,case language ,விருது வழங்கல், முதல்வர், கலெக்டர், சென்னை, வழக்காடு மொழி

நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாநில மனித உரிமை ஆணையத்தின் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மாநில மனித உரிமை ஆணைய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழ் வழியில் உருவாக்கப்படும்.

மனித உரிமை தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும். மனித உரிமை ஆணைய விசாரணை குழுவில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

விழாவில், மனித உரிமை புகார்கள் சிறப்பாக கையாண்ட கலெக்டர், எஸ்.பி.,க்களுக்கு ஸ்டாலின் விருது வழங்கினார். திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்களுக்கும், மதுரை போலீஸ் கமிஷனர் மற்றும் கோவை எஸ்.பி.,க்கும் விருது வழங்கப்பட்டது.

Tags :