Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

By: vaithegi Tue, 28 Nov 2023 12:04:49 PM

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர். செந்தல் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இற்கு இ டையே ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிறையில் இருந்து சிகிச்சை பெற முடியாது எனக் கோரியிருந்தார். எனவே இதற்கு செந்தில்பாலாஜியின் மருத்துவ அறிக்கையை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

supreme court,minister senthil balaji,bail ,உச்சநீதிமன்றம் ,அமைச்சர் செந்தில்பாலாஜி ,ஜாமின்

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது இலாகா இல்லா அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து சாதாரண ஜாமீன் மனு தாக்கல் செய்யும் படி அறிவுறுத்தி, வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது மருத்துவ ஜாமின் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமின் மனு தாக்கல் செய்யப்படும் என்று செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.


Tags :