Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா போரில் மத்திய அரசு வீரர்களை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை-சுப்ரீம் கோர்ட்டு

கொரோனா போரில் மத்திய அரசு வீரர்களை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை-சுப்ரீம் கோர்ட்டு

By: Karunakaran Sat, 13 June 2020 10:32:31 AM

கொரோனா போரில் மத்திய அரசு வீரர்களை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை-சுப்ரீம் கோர்ட்டு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றபோது, நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

coronavirus,supreme court,delhi,health care workers ,கொரோனா,சுப்ரீம் கோர்ட்டு,டெல்லி,சுகாதாரப் பணியாளர்கள்

சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தல் விவகாரம் தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது. அதன்பின் நீதிபதிகள், சுகாதார பணியாளர்களுக்கு தங்குமிடம், சம்பளம் வழங்கப்படாத பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் தீர்த்து வைத்திருக்க வேண்டும். நீதிமன்றங்கள் அதை தீர்ப்பதாக இருக்கக் கூடாது. சுகாதாரப் பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கூடுதல் பணத்தை செலவிடுங்கள் என்று கூறினார்.

மேலும் அவர்கள், கொரோனா போரில் மத்திய அரசு வீரர்களை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை என்று வேதனையாக கூறினர். மேலும் இந்த வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. டெல்லியில் கொரோனா பரிசோதனை குறைந்து கொண்டு வருவதாக ஏற்கனவே நீதிபதிகள் குற்றம்ச்சாட்டியது குறிப்பிடதக்கது.

Tags :
|