Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம்அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்ட்டீஸ்

அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம்அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்ட்டீஸ்

By: vaithegi Fri, 22 Sept 2023 2:59:35 PM

அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம்அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்ட்டீஸ்

சென்னை: சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அரசின் உரிய அனுமதியோடு மாநாடு நடத்தப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் எதிர்க்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒழிக்கப்பட வேண்டியது என கூறினார். எனவே இதற்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

supreme court,minister udayanidhi ,உச்சநீதிமன்றம் ,அமைச்சர் உதயநிதி

இதனை அடுத்து சனாதனத்திற்கு எதிராக நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு பாபு கலந்து கொண்டது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . சென்னையை சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் சாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் பற்றி விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் சனாதன எதிர்ப்பு மாநாடு பற்றி சிபிஐ விசாரணை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது

Tags :