Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வோடபோன் நிறுவனத்துக்கு ரூ.833 கோடியை திருப்பித் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

வோடபோன் நிறுவனத்துக்கு ரூ.833 கோடியை திருப்பித் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

By: Nagaraj Fri, 24 July 2020 2:18:30 PM

வோடபோன் நிறுவனத்துக்கு ரூ.833 கோடியை திருப்பித் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

வோடபோன் நிறுவனத்துக்கு 833 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வோடபோன் நிறுவனத்திற்கு சற்றே ஆறுதல் கிடைத்துள்ளது.

வோடபோன் நிறுவனம் 2014 முதல் 2018 வரை அதிகமாகச் செலுத்திய வரி நாலாயிரத்து 759 கோடி ரூபாயைத் திரும்பத் தரும்படி வருமான வரித்துறையிடம் கோரியது. இதில் ஏற்கெனவே 733 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதத்தில் உத்தரவிட்டது.

vodafone,rs 833 crore,ordered,repayable ,வோடபோன், ரூ.833 கோடி, உத்தரவு, திருப்பி செலுத்த

இதையடுத்து 833 கோடி ரூபாயை வருமான வரித்துறை திருப்பிக் கொடுக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அப்போது பிந்தைய ஆண்டுகளில் செலுத்த வேண்டிய வரி நிலுவை உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

பிந்தைய நிலுவைக்காகத் திரும்பச் செலுத்த வேண்டிய தொகையைப் பிடிப்பது முறையில்லை எனக் கூறிய உச்சநீதிமன்றம், வோடபோன் நிறுவனத்துக்கு 833 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடபோன் நிறுவனத்துக்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

Tags :