Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்துமு உரிய காலத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்துமு உரிய காலத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

By: Nagaraj Thu, 11 May 2023 8:18:54 PM

மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்துமு உரிய காலத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிரா: ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. மேலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து உரிய காலத்திற்குள் முடிவெடுக்குமாறு சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியில் உள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரது அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே திடீரென போர்க்கொடி உயர்த்தினார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தனி அணியாக பிரிந்தனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மெகா கூட்டணி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜகவுடன் சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டணி அமைத்தனர். இதனால் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்களின் புதிய ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் சின்னத்திற்கு இரு தரப்பினரும் உரிமை கோரினர். இது தொடர்பாகவும், 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை பயன்படுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

government,maharastra,shinde , ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர அரசு, மகாராஷ்டிரா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை தொடர்ந்து விசாரித்து வந்தது. கடந்த பிப்ரவரி 21ம் தேதி முதல் 9 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இரு பிரிவினரும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் மார்ச் 16ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த சின்னம் மற்றும் 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

மேலும் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து உரிய காலத்திற்குள் முடிவெடுக்குமாறு சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு, ஆட்சியை கவிழும் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டது.

Tags :