Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடியை விமர்சித்த வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பிரதமர் மோடியை விமர்சித்த வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

By: Karunakaran Mon, 15 June 2020 09:19:17 AM

பிரதமர் மோடியை விமர்சித்த வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பயங்கரவாத தாக்குதல்களையும், மரணங்களையும் வாக்கு வங்கி அரசியலுக்கு பிரதமர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக பத்திரிகையாளர் வினோத் துவா பிரதமர் மோடியை குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க.வை சார்ந்த அஜய் ஷ்யாம் என்பவர் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக பத்திரிகையாளர் வினோத் துவா மீது சிம்லா போலீசில் புகார் அளித்தார். அதில், பயங்கரவாத தாக்குதல்களையும், மரணங்களையும் வாக்கு வங்கி அரசியலுக்கு பிரதமர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக வினோத் துவா பேசினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

vinod dua,modi,supreme court,prime minister ,பிரதமர் மோடி,வினோத் துவா,சுப்ரீம் கோர்ட்,விசாரணை

இந்த புகார் மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசு மற்றும் இமாச்சல பிரதேச அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க வினோத் துவா கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த சிம்லா போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

Tags :
|