Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளுக்கான தடை தொடரும் ..உச்சநீதிமன்றம்

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளுக்கான தடை தொடரும் ..உச்சநீதிமன்றம்

By: vaithegi Fri, 20 Oct 2023 2:53:10 PM

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளுக்கான தடை தொடரும் ..உச்சநீதிமன்றம்


சென்னை:பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தொடரும் ... தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு 1 முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து அதில் அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வாதிட்டனர். அதனால் விதிக்கப்பட்ட தடை பற்றி மறுபரிசீலனை செய்ய கோரிக்கை எழுந்தது.

supreme court,plastic products,bags ,உச்சநீதிமன்றம் ,பிளாஸ்டிக் பொருட்கள் ,பைகள்


இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 1 முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தமிழக அரசின் தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பேப்பர் கப் மீதான தடை உத்தரவு மத்திய அரசின் நடைமுறைகள் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Tags :