Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வைரம் பதித்த முகக்கவசத்தை அறிமுகப்படுத்திய சூரத் நகைக்கடை

வைரம் பதித்த முகக்கவசத்தை அறிமுகப்படுத்திய சூரத் நகைக்கடை

By: Nagaraj Fri, 10 July 2020 8:17:18 PM

வைரம் பதித்த முகக்கவசத்தை அறிமுகப்படுத்திய சூரத் நகைக்கடை

கொரோனா காலத்திலும் தங்களின் வியாபாரத்தை உயர்த்தி கொள்வதில் பல்வேறு வகையிலும் முயற்சிக்கின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள். சூரத்தில் உள்ள நகைக்கடையில் டைமண்ட் பதித்த முகக்கவசம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுதான் விஷயமே.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் அவசியமான ஒன்றாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூனேவில் ஷங்கர் குரேட் என்பவர் தங்கத்தில் முகக்கவசம் செய்து அதனை அணிந்துக்கொண்டு வலம் வருகிறார்.

diamonds,masks,brides,sales,matching ,வைரம், முகக்கவசம், மணமக்களுக்கு, விற்பனை, மேட்சிங்

இந்த தங்க முகக்கவசத்தின் மதிப்பு ரூ.2.90 லட்சம். இதனைத்தொடர்ந்து தற்போது சூரத்தில் உள்ள நகைக்கடையில் டைமண்ட் பதித்த முகக்கவசம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சூரத்தில் உள்ள குஷால்பாய் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் நான்கு விதமான டிசைன்களில் இந்த முகக்கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது மணமக்களுக்கான பிரத்யேக முகக்கவசம் ஆக உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ஆண் , பெண் இருவருக்குமான மேட்சிங் ஜோடி முகக்கவசங்களும் கிடைக்கின்றன. இந்த முகக்கவசங்கள் 1 லட்சத்தில் துவங்கி 4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. முடியலைப்பா... இவங்க அலப்பறை என்று மக்கள் நொந்து கொள்கின்றனர்.

Tags :
|
|
|