Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல்வரி 1%ஆக குறைப்பு

குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல்வரி 1%ஆக குறைப்பு

By: vaithegi Sat, 24 June 2023 3:18:58 PM

குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல்வரி 1%ஆக குறைப்பு

சென்னை: மேல் வரி 1.25% இருந்து 1% குறைப்பு ... ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி1% ஆக குறைக்கப்படும். சென்னையை தொடர்ந்து, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,வருகிற ஜூலை 1ம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர்/கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி மாதத்திற்கு 1.25 என்ற சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைக்கப்படும்.

excise duty,drinking water tax ,மேல்வரி ,குடிநீர் வரி

தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25% என்ற விகிதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல் வரி 1.25% இருந்து ஜூலை 1-ம் தேதி முதல் 1% குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்து உள்ளது.

Tags :