Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி துவக்கம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி துவக்கம்

By: vaithegi Tue, 25 Apr 2023 4:12:20 PM

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி துவக்கம்

சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரும் நோக்கில், முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து கலைஞரின் நூற்றான்டு பிறந்தநாளை முன்னிட்டு மதுவிலக்கு துவக்கம் பெரும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.தற்போது அதற்கான முதற்கட்ட பணிகளை அதிகாரிகள் துவங்கி உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

census,tasmac shops ,கணக்கெடுப்பு ,டாஸ்மாக் கடைகள்


எனவே அதன் படி, 50 மீட்டர் தொலைவில் அருகருகே உள்ளே கடைகள், வருமானம் குறைவாக உள்ள கடைகள், வழிபாடு தளங்கள், கல்வி நிலையங்கள் அருகே உள்ள கடைகள்,

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் கடைகள் என்று கணக்கெடுத்து அதில் 500 கடைகளை மூட டாஸ்மாக் ஆயத்தீர்வை முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தில் 5000க்கும் அதிகமான கடைகள் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Tags :
|