Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கழிவுநீர் குழாயில் புகுந்த சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு

கழிவுநீர் குழாயில் புகுந்த சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு

By: Nagaraj Sun, 01 Nov 2020 4:49:11 PM

கழிவுநீர் குழாயில் புகுந்த சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு

கழிவுநீர் குழாயில் புகுந்த சாரைப்பாம்பு... ஈரோடு அருகே கழிவுநீர் குழாயில் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு அடுத்த முள்ளாம்பரப்பு அருகே வேலவன் நகரை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரது வீட்டின் முன்பாக 5 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று நின்றுள்ளது. அக்கம்பக்கத்தினர் திரண்டதால் அந்த பாம்பு அருகிலிருந்த கழிவுநீர் கால்வாய் குழாய்க்குள் புகுந்தது.

sewer pipe,snake,forest,caught. ,கழிவுநீர் குழாய், பாம்பு, வனத்துறை, பிடித்தார்.

இதனையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் போராடியும் பாம்பு வெளியே வராத நிலையில், பாம்பு பிடி வீரர் யுவராஜ் வரவழைக்கப்பட்டார். இதனையடுத்து, கழிவுநீர் குழாயினுள் லாவகமாக கையை விட்டு பாம்பை வெளியே கொண்டு வந்த யுவராஜ், அதனை சாக்கு பையில் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
|
|