Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் நலன் கருதி 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்

மாணவர்கள் நலன் கருதி 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்

By: Monisha Wed, 09 Sept 2020 11:39:11 AM

மாணவர்கள் நலன் கருதி 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்

மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க வரும் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகளுக்கு விடுமுறை நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதோடு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் படங்கள் கற்பிக்கப்படுகின்றன.

students,depression,online classes,minister of education ,மாணவர்கள்,மனஅழுத்தம்,ஆன்லைன் வகுப்புகள்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க வரும் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்

மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Tags :