Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூரிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமாக தண்ணீர் திறப்பால் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு

மேட்டூரிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமாக தண்ணீர் திறப்பால் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு

By: Nagaraj Thu, 08 Sept 2022 09:30:02 AM

மேட்டூரிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமாக தண்ணீர் திறப்பால் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு

மேட்டூர்: வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது... மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர்திறக்கப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 80 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

coastline,people,warning,opening of water,flood ,கரையோரம், மக்கள், எச்சரிக்கை, தண்ணீர் திறப்பு, வெள்ளப்பெருக்கு

நேற்று காலையும் அதே அளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் 1,25,000 கன அடியாக உள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக 1,02,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.


கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. காவிரி பாயும் 12 டெல்டா மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Tags :
|