Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் கைது

By: Nagaraj Sun, 12 July 2020 10:57:47 AM

கேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (12.07.20) காலை கொச்சினில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 5ஆம் தேதி டிப்ளமாட்டிக் பார்சல் என்ற பெயரில் வந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் கேரள விமான நிலையத்தில் பிடிபட்டது. தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஸ்வப்னா கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடி பிரிவில் பணியாற்றுபவர் என்பதால் கேரள அரசியலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி முற்றியது.

swapna suresh,arrested,bengaluru,nia,officers ,ஸ்வப்னா சுரேஷ், கைது, பெங்களூரு, என்.ஐ.ஏ., அதிகாரிகள்

இந்த தங்கக்கடத்தல் குறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கேரள காவல் துறையும், சுங்கத்துறையும் ஸ்வப்னா சுரேஷை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரை இன்று (12.07.20) காலை கொச்சினில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|