Advertisement

கொரோனா தொற்றின் முக்கிய மையமாக மாறியது சிட்னி

By: Nagaraj Thu, 16 July 2020 1:29:37 PM

கொரோனா தொற்றின் முக்கிய மையமாக மாறியது சிட்னி

கொரோனா தொற்று முக்கிய மையமான சிட்னி... கொரோனா (கொவிட்-19) தொற்று பரவலின், முக்கிய மையமாக சிட்னி மாறியுள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

நியூ சவுல்த் வேல்ஸ் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மெல்பேர்னை தொடர்ந்து தற்போது சிட்னியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் புதிய மையமாக சிட்னி உருவாகி உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

sydney,corona,distribution center,new south wales,postponement ,
சிட்னி, கொரோனா, பரவல் மையம், நியூ சவுத் வேல்ஸ், ஒத்தி வைப்பு

தற்போது நியூ சவுல்த் வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா வைரஜட அதிகரித்து வருவதால், இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாகாண அரசுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்துடனான எல்லை திறக்கும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2.25 கோடி மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில், இதுவரை கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 10,810 பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவால் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|