Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குஜராத்தில் பெண் கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு

குஜராத்தில் பெண் கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு

By: Nagaraj Sat, 31 Oct 2020 12:35:31 PM

குஜராத்தில் பெண் கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை ஒட்டி நடந்த விழா அணிவகுப்பில் பெண் கமாண்டோக்களின் நேர்த்தியான மற்றும் மிடுக்கான அணிவகுப்பு பார்க்கும் அனைவரையும் கவர்ந்தது.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் கெவாடியாவில் அமைத்துள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில்சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் 'ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்' கம்பீர அணிவகுப்பு கெவடியாவில் நடந்து வருகிறது.

parade,female commandos,sublime,unity day ,அணிவகுப்பு, பெண் கமாண்டோக்கள், கம்பீரம், ஒற்றுமை தினம்

இந்த அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார். இந்த அணிவகுப்பில் பெண் கமாண்டோக்களின் நேர்த்தியான மற்றும் மிடுக்கான அணிவகுப்பு பார்க்கும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி மகிழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|